வீடு கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும்


வீடு கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும்
x
தினத்தந்தி 9 Jun 2023 1:00 AM IST (Updated: 9 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பு

வால்பாறையில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையாக தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி காமராஜர் நகர் பகுதியில் தீயணைப்பு நிலையத்திற்கு பின்புறம் 2¼ ஏக்கர் பரப்பளவில் ரூ.8 கோடியில் 112 வீடுகள் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும், பணிகளை முடித்து, வீடுகளை ஒதுக்கீடு செய்து கொடுக்கவில்லை. அங்கு கட்டுமான பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது.

விரைவுபடுத்த வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் முதல் வாரம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த காலங்களில் கட்டிட பணிகள் மேற்கொள்வது மிகவும் கடினம். மேலும் ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் மழைக்காலங்களில் மாற்று இடம் இன்றி பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story