மாளிகை பாறை கருப்பசாமி கோவில் திருவிழா
முத்தைாயாபுரம் மாளிகை பாறை கருப்பசாமி கோவில் திருவிழா நடைபெற்றது.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் தோப்புத் தெருவில் அமைந்துள்ள மாளிகை பாறை கருப்பசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த 4-ந் தேதி கால்நாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து கருப்பசாமிக்கு தினமும் அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. 10-ந் தேதி யாகசாலை பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிகாலை 5 மணி அளவில் உலக மக்கள் நன்மைக்காக மாளிகை பாறை கருப்பசாமியின் அருள்வாக்கு பெற்ற இளம் சித்தர் முருகன் சுவாமிகளின் பூமி தவபூஜை நடைபெற்றது. இந்த பூஜைக்கு பின்னர் 11-ந் தேதி அதிகாலை 6 மணிக்கு வெளியே வந்த பின்னர், தீர்த்தக்கரை செல்லுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று அரிவாள் மேல் ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். மதியம் 1 மணிக்கு பக்தர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் சுவாமிக்கு மதுபானத்தை காணிக்கையாக வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சேகர், திருவேங்கடம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.