வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
அவினாசி
அவினாசி அருகே தெக்கலூர் ஊராட்சி காமநாயக்கன்பாளையம் ஏ.டி.காலனியில் இந்திரா குடியிருப்பு உள்ளது. இதில் ஒரு வீட்டில் ரங்கம்மாள் (52) மற்றும் அவரது மகன் தமிழரசன் (23) இவர்கள் இருவரும் குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தமிழரசன் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் ரங்கம்மாள் தூங்கிகொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் கனமழை பெய்துகொண்டிருந்தது. இதனால் வீட்டின் மேற்கூரையிலிருந்து மழைநீர் ரங்கம்மாள் மீது விழுந்துள்ளது. எனவே அவர் படுக்கையிலிருந்து எழுந்து கதவை திறந்து வெளியே வந்துள்ளார். அப்போது கண் இமைக்கும் நேரத்தி வீட்டின் மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்தது. அந்தஅதிர்ச்சியில் ரங்கம்மாள் மயங்கி விழுந்துள்ளார். வீடு இடிந்துவிழுந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மயங்கி கிடந்த ரங்கம்மாவிற்கு முதலுதவி செய்து அவரை ஆசுவாசப்படுத்தின்ர். மழைநீர் கொட்டியதால் வெளியே வந்ததால் ரங்கம்மாள் உயிர்பிழைத்தார். தகவல் அறிந்து தெக்கலூர் ஊராட்சி தலைவர் மரகதமணி மணியன் நேரில் சென்று ரங்கம்மாளுக்கு ஆறுதல் கூறி உடமைகளை இழந்த அவருக்கு அரிசி, பருப்பு, காய்கறிமளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவி வழங்கினார்.
---