வீடு புகுந்து 9½ பவுன் நகைகள் திருட்டு


வீடு புகுந்து 9½ பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 22 May 2023 1:00 AM IST (Updated: 22 May 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

வீடு புகுந்து 9½ பவுன் நகைகள் திருட்டு

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

கோவை சரவணம்பட்டி சின்ன மேட்டுப்பாளையம் துரைசாமி நாயுடு நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி மஞ்சு(வயது 23). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கணவன்-மனைவி வெளியே செல்லும்போது வீட்டின் கதவை பூட்டி அருகில் உள்ள சுவர் மீது சாவியை வைத்துச்செல்வது வழக்கம்.

இ்ந்த நிலையில் சம்பவத்தன்று ராஜசேகர்-மஞ்சு வீட்டை பூட்டிவிட்டு, சாவியை சுவர் மீது வைத்துவிட்டு, வெளியே சென்று விட்டனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 9½ பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சாவியை எடுத்து வீட்டை திறந்து மர்ம ஆசாமி நகையை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story