இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்


இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்
x

கபிஸ்தலம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

கபிஸ்தலம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொகுப்பு வீடுகள்

கபிஸ்தலம் அருகே உள்ள உள்ளிக்கடை ஊராட்சி காளியம்மன் கோவில் தெருைவ சேர்ந்தவர்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-கபிஸ்தலம் அருகே உள்ள உள்ளிக்கடை ஊராட்சி காளியம்மன் கோவில் தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 1991-ம் ஆண்டில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 25 பேருக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

சீரமைக்க கோரிக்கை

தற்போது பெய்த கனமழையால் தொகுப்பு வீடுகள் முழுவதும் சிதலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் தொகுப்பு வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுவதால் வீட்டில் வசிப்பவர்கள் இரவில் தங்கள் குழந்தைகளோடு வெளியில் படுத்து தூங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை உடனடியாக தஞ்சை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story