மண்சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்


மண்சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்
x

பந்தலூர் அருகே மண்சரிவால் அந்தரத்தில் வீடுகள் தொங்குகின்றன. அங்கு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கொளப்பள்ளியில் உள்ள நூலகம் முன்பு முத்துலிங்கம் என்பவது வீட்டின் முன்பு மண்சரிவு ஏற்பட்டு, அருகே உள்ள வீடு மீது விழுந்தது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் மேலும் மண்சரிவு ஏற்பட்டு 2 வீடுகள் இடியும் நிலையிலும், அந்தரத்தில் தொங்கிய நிலையிலும் காணப்படுகிறது. இதன் காரணமாக மண்சரிவு ஏற்படுவதை தவிர்க்க தார்பாய்கள் கொண்டு மூடப்பட்டு உள்ளது. வீடுகள் அந்தரத்தில் தொங்குவதால், அங்கு வசிப்பவர்கள் அச்சத்துடன் உள்ளனர். மேலும் குழந்தைகள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, அப்பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story