தக்காளி விலை கிலோ ரூ.90 ஆக உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி


தக்காளி விலை கிலோ ரூ.90 ஆக உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி
x

திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் தக்காளி விலை கிலோ ரூ.90 ஆக உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் தக்காளி விலை கிலோ ரூ.90 ஆக உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தக்காளி

திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. தண்ணீர் இருக்கும் பகுதிகளில் காய்கறி பயிர்கள் பயிரிடப்பட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர் அந்த வகையில் செங்கம், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிக அளவில் பயிரிடப்பட்டு அப்பகுதிகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

அதில் காய்கறிகளில் மிகவும் விலை மலிவாக காணப்படுவது தக்காளிதான். விளைச்சல் அதிகமான காலங்களில் கிலோ ரூ.15 வரை சரியும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தக்காளி விலை கிலோ ரூ.10 முதல் ரூ.20-க்கு விற்பனை செய்த நிலையில் தற்போது கிலோ ரூ.1100 வரை கிடுகிடுவென உயர்ந்துள்ளது ஒட்டுமொத்த ஏழை, எளிய மக்களையும், இல்லத்தரசிகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தக்காளியின் திடீர் விலையேற்றம் குறித்து காய்கறி வியாபாரிகள் கூறுகையில், ''திருவண்ணாமலை பகுதியில் இருந்து நகர்புற பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு தினமும் ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் மார்க்கெட்டுகளுக்கு தக்காளி கொண்டு வரப்படுகிறது.

தற்போது ஆந்திரா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு விளைச்சல் குறைந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து கடந்த 3 நாட்களாக குறைந்து காணப்படுகிறது.

குறிப்பாக நாள் ஒன்றுக்கு 60முதல் 70டன் வரை தக்காளி லோடு வரும். ஆனால் தற்போது தக்காளி மற்றும் காய்கறிகள் வரத்து அதிக அளவில் வருவது வெகுவாக குறைந்துள்ளது.

கிரேடு பாக்ஸ்

இதன் காரணமாக, கடந்த 3 நாட்களுக்கு முன்பு 10 கிலோ தக்காளி (1 கிரேடு பாக்ஸ்) ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.1000ஆக உயர்ந்து விட்டது.இதனால் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்த நிலையில் கிட்டத்தட்ட 3 மடங்காக உயர்ந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளியின் வரத்து குறைய, குறைய இன்னும் விலை உயர வாய்ப்புள்ளது. இன்னும் ஓரிரு வாரங்கள் இந்த விலையேற்றம் நீடிக்கலாம்.

அதுபோல் கேரட், பீன்ஸ், பீட்ரூட் ஆகிய காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளது

வாணாபுரம்பகுதிகளில்கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து இல்லத்தரசிகள் கூறுகையில், ''கடந்த 4 வாரங்களுக்கு முன்பு 4 கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக தக்காளி விலை உயர்ந்து தற்போது ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமையலில் முக்கிய பங்குபெறும் தக்காளியை கிலோ கணக்கில் வாங்கி பயன்படுத்தி வந்தோம். தற்போது விலை உயர்ந்துள்ளதால் குறைவாக வாங்குகிறோம். தக்காளி விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.


Next Story