குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலியானது எப்படி?- அமைச்சர் தா.மோ.அன்பரசன் விளக்கம்


குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலியானது எப்படி?- அமைச்சர் தா.மோ.அன்பரசன் விளக்கம்
x

சென்னை நங்கநல்லூர் கோவிலில் சாமியை குளிப்பாட்டும் போது குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழந்தனர்.

சென்னை,

சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோவில் திருவிழாவின்போது குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

முதலில் ஒருவர் மட்டுமே ஆழமான பகுதிக்குள் தவறி விழுந்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்துள்ளனர். இதில், ராகவன், லோகேஸ்வரன், பானேஷ், சூர்யா, ராகவன் உள்ளிட்ட 5 பேரும் நீரில் மூழ்கி 5 உயிரிழந்துள்ளனர். 5 பேரும் 20 முதல் 25 வயது கொண்ட படித்த இளைஞர்கள்.

தகுந்த பாதுகாப்பு இல்லாமல் நிகழ்வை நடத்தியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தகுந்த பாதுகாப்புடன் இந்த நிகழ்வை நடத்தி இருக்க வேண்டும். நான் சட்டமன்றத்தில் இருந்தபோது இந்தத் தகவல் வந்தது. உடனடியாக முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றேன். முதல்-அமைச்சர் நேரில் செல்லுங்கள் என்று கூறினார். முதல்-அமைச்சரின் சார்பில் 5 பேரின் குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில். நிகழ்வுக்கு முன்பாக காவல்துறைக்கு முறையாக தகவல் அளிக்கப்பட்டதா, இல்லையா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story