கொலையாளிகள் 7 பேரும் சிக்கியது எப்படி?


கொலையாளிகள் 7 பேரும் சிக்கியது எப்படி?
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கொலையாளிகள் 7 பேரும் சிக்கியது எப்படி?

கோயம்புத்தூர்

கோவை

கோவை கோர்ட்டு அருகே ரவுடி கொலை செய்யப்பட்ட சம்ப வத்தில் தொடர்புடைய கொலையாளிகள் 7 பேரும் சிக்கியது எப்படி? என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.

8 தனிப்படைகள்

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவையில் கடந்த 2 நாட்களில் 2 ரவுடிகள் கொலை செய்யப் பட்டு உள்ளனர். இதில் கோவை கோர்ட்டு அருகே நடைபெற்ற கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசாருக்கு நீலகிரி மாவட்டம் குன்னூரில் அந்த கும்பல் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

உடனே தனிப்படையினர் நேற்று (நேற்று முன்தினம்) இரவு அங்கு விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் அந்த கும்பல் ஊட்டிக்கு தப்பியது. இதையடுத்து போலீசார் ஊட்டி விரைந்தனர்.

போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு

இதனால் அந்த கும்பல் ஊட்டியில் இருந்து கோத்தகிரியை நோக்கி சென்றனர். உடனடியாக நீலகிரி போலீஸ் சூப்பிரண் டிற்கு தகவல் கொடுக்கப்பட்டு ஊட்டி-கோத்தகிரி சாலை, கோத் தகிரி-குன்னூர் சாலையில் தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டு அவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவ ரையும் தனிப்படை போலீசார் 2 கார்களில் ஏற்றி கோவைக்கு அழைத்து வந்தனர்.

கோவைக்கு வரும் வழியில் கைது செய்யப்பட்டவர்களில் ஜோஸ்வா, எஸ்.கவுதம் ஆகிய 2 பேரும் தங்களுக்கு வாந்தி வருவதுடன், தலை சுற்றுகிறது. மேலும் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று கூறினர். இதனால், போலீசார் அவர்கள் இருவரையும் காரில் இருந்து இறக்கி விட்டனர். அப்போது அவர்கள் போலீசாரை தள்ளி விட்டு தப்பி ஓடினர். மேலும் அவர்கள் இருவரும் அங்கு புதரில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, தங்களை பிடிக்க வந்த போலீஸ்காரர் யூசுப்பை அரிவாளால் வெட்டினர்.

துப்பாக்கி சூடு

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பன் அவர்களை நோக்கி துப்பாக்கியால் 4 ரவுண்டு சுட்டார். இதில் எஸ்.கவுதம் காலில் ஒரு குண்டும், ஜோஸ்வா காலில் 2 குண்டுகளும் பாய்ந்தன. ஒரு குண்டு யார் மீதும் பட வில்லை. இந்த சம்பவத்தில் காயமடைந்த வர்களுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் கோவையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கோவையில் குற்றசம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை நகரில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய 540 ரவுடிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ரவுடிகளை ஒடுக்க அதிரடி திட்டம் தீட்டப்பட்டது.

6 ரவுடி கும்பல்

மேலும் நகரம் முழுவதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சரவணம்பட்டியில் நடைபெற்ற சோதனையில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை நகரில் 6 ரவுடி கும்பல்கள் உள்ளன. இவர்களின் பின்னணி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முன்னாள் குற்றவாளிக ளிடம் இனி குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என்று பிணை பத்திரம் எழுதி வாங்கப்படுகிறது. இதில் 10 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். 75 பேரிடம் பிணை பத்திரம் வாங்கப்பட்டுள்ளது. பிணை பத்திரம் கொடுத்தும் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் 13 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குண்டர் தடுப்பு சட்டம்

இந்த நிலையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டு உள்ளது. நகரில் பொதுமக்கள் அச்சமின்றி நடமாடவும், குற்றங்களை தடுக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படு கிறது. இரவு ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story