இப்படி இருந்தால் எப்படி...?


இப்படி இருந்தால் எப்படி...?
x

இப்படி இருந்தால் எப்படி...?

கோயம்புத்தூர்

அம்மன்குளம் பகுதியில் உள்ள பொது கழிவறையில் கதவுகள் இல்லாமல் பேஷன்கள் மட்டும் வெளியே தெரியும் வகையில் இப்படி இருந்தால் எப்படி என்று மிக மோசமான நிலையில் உள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், பேஷன்கள் அருகருகே ஒட்டி இருப்பது போல் அமைத்து இருப்பது மிகவும் கொடுமையானது. இந்த கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வந்தாலும், பயன்படுத்த முடியாத நிலையே ஏற்படும் என்பதும் அப்பகுதி மக்களின் புலம்பல்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், பொதுக்கழிப்பிடம் என்றால், எல்லாம் பொதுவாக வைத்து விட்டு விட்டனர். தாயும், பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறுதானே. என்னதான் ஒன்றாக காலைக்கடனை முடிக்க சென்றாலும், ஒரே இடத்தில் ஒட்டி இருக்க முடியுமா. இதுபோன்ற அவல நிலைகளுடன் இனியாவது கழிப்பிடங்கள் கட்டாமல் இருக்க வேண்டும். இதனை கண்காணிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றார்.


Next Story