தமிழகம் முழுவதும் விபத்து வழக்குகளில் செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகை எவ்வளவு?- அரசு போக்குவரத்துக்கழகம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தமிழகம் முழுவதும் விபத்து வழக்குகளில் செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகை எவ்வளவு?- அரசு போக்குவரத்துக்கழகம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

தமிழகம் முழுவதும் விபத்து வழக்குகளில் செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகை எவ்வளவு? என்பது குறித்து அரசு போக்குவரத்துக்கழகம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


மதுரையைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் கடந்த 2021-ம் ஆண்டில் அரசு பஸ் மோதிய விபத்தில் சிக்கி இறந்தார். இவரது இறப்புக்கு உரிய இழப்பீடு கேட்டு அவரது மனைவி மதுரை மாவட்ட விபத்து வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த மாவட்ட கோர்ட்டு, திருநாவுக்கரசுவின் மனைவிக்கு ரூ.13 லட்சத்து 55 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார்.

அப்போது நீதிபதி, தமிழகம் முழுவதும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் மொத்தம் எவ்வளவு தொகையை இழப்பீடாக வழங்க வேண்டியுள்ளது? என கேள்வி எழுப்பினர்.பின்னர் இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story