நெற்பயிரில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?


நெற்பயிரில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
x
தினத்தந்தி 26 Nov 2022 6:45 PM GMT (Updated: 26 Nov 2022 6:45 PM GMT)

நெற்பயிரில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை தியாகதுருகம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் வட்டாரத்தில் பொன்னி, கோ-ஆர் 51, பி.பி.டி. 5204 மற்றும் ஏ.டி.டி.ஆர். 45 ஆகிய நெல் ரகங்களை விவசாயிகள் பயிர் செய்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் நெல் பயிரில் ஒருசில இடங்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் தென்படுகிறது. தற்போது நிலவும் குளிச்சி, பனிப்பொழிவு மற்றும் வறண்ட வானிலை காரணமாக பூச்சி மற்றும் நோய் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் விளைச்சல் பாதிக்கப்படும். நெற்பயிரில் இளம் மற்றும் வளர்ந்த புழுக்கள் பயிரின் இலைகளை மடக்கி உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி இலைகளில் சேதத்தை ஏற்படுத்தும். அவ்வாறு தாக்கப்பட்ட இலையானது வெள்ளை நிறத்தில் காணப்படும். இப்புழுவின் சேதத்தை கட்டுப்படுத்த பின்வரும் மருத்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும். கார்டாப் ஹைட்ரோ குளோரைட் 50 சதவீதம் எஸ்.பி.லிட்டருக்கு 2 கிராம், பிரப்பனோ பாஸ் 50 சதவீதம் இ.சி. லிட்டருக்கு 1.5 மி.லி, குளோர் பைரிபாஸ் 20 சதவீதம் இ.சி. லிட்டருக்கு 2 மி.லி, இன்டாக்சா கார்ப் 15.8 சதவீதம் இ.சி. லிட்டருக்கு 0.7 மி.லி அல்லது அசாடிராக்டின் 10,000 பிபிஎம் லிட்டருக்கு 2 மி.லி என்ற கணக்கில் இதனுடன் ஒட்டும் திரவம் ஒருலிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி கலந்து பயிரில் தெளிக்க வேண்டும்.

கூடுதல் மகசூல்

மேலும் நெற்பயிரில் தற்போது இலைப்புள்ளி நோய் மற்றும் பாக்டீரியல் இலைக்கறுகல் நோய் தாக்குதலுடன் தென்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த டிரைசைக்ளோசோல் 75 சதவீதம் டபிள்யூ.பி. ஏக்கருக்கு 120 கிராம் மற்றும் பாக்டீரிமைசீன் 40 கிராம் ஆகியவற்றை கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்கவும். இவ்வாறு செய்தால் நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை காப்பாற்றி கூடுதல் மகசூல் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story