கரும்புகளில் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்துவது எப்படி?


கரும்புகளில் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்துவது எப்படி?
x

கரும்புகளில் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நல்லறிக்கை கிராமத்தில் கரும்புகளில் ஏற்படும் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய வேளாண் விஞ்ஞானி ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பூச்சி மற்றும் நோயின் தாக்குதல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. கரும்பு விவசாயிகளுக்கு நோயின் தாக்குதல் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள், கரும்பில் பாதிப்பு ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவது குறித்து எடுத்துரைத்தனர். தொடர்ந்து கரும்பு விவசாயிகளுக்கு கரும்பில் குருத்து முறுக்கல் அல்லது குருத்து அழுகல் நோய் மேலாண்மை முறைகள் குறித்தும், கரும்பில் பாதிப்பு ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் பேராசிரியர் தங்கேசஸ்வரி, கரும்பு அலுவலர்கள் சுரேஷ், தாமரைச்செல்வி மற்றும் புதுவேட்டக்குடி கோட்டம் மற்றும் மருதையான்கோவில் கோட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story