கோழிப்பண்ணைகளில் ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி?


கோழிப்பண்ணைகளில் ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி?
x

கோழிப்பண்ணைகளில் ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்

மழைக்கு வாய்ப்பு இல்லை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 2 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 2 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு முறையே 10 கி.மீ, 10 கி.மீ., மற்றும் 8 கி.மீ.வேகத்தில் மேற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 30 சதவீதமாகவும், அதிகபட்சமாக 80 சதவீதமாகவும் இருக்கும்.

ஈ கட்டுப்பாடு அவசியம்

சிறப்பு வானிலையை பொறுத்தவரையில், சமீப நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருவதால், ஈக்களின் இனபெருக்கத்திற்கு ஏற்ற தட்பவெப்பநிலை நிலவுகிறது. அதனால் கோழிப்பண்ணைகளில் ஈக்களின் தொல்லை அதிகமாகி உள்ளது. கோழிப்பண்ணைகளில் ஈக்களின் எண்ணிக்கையை கண்காணித்து, அதற்கு ஏற்ப கட்டுப்படுத்துதல் முறைகளை கையாளுவது மிகவும் சிறந்ததாகும். கோழிப்பண்ணைகளில் ஈக்களின் எண்ணிக்கையை கண்காணிக்க ஸ்பார்ட் கார்டை பயன்படுத்தலாம்.

பண்ணையில் ஈக்களின் எண்ணிக்கை 100-க்கு மேல் காணப்பட்டால், ஈக்கட்டுப்பாடு முறைகளை உடனடியாக கையாளுவது மிகவும் அவசியம் ஆகும். பண்ணைகளில் தண்ணீர் கசிவு இல்லாமல் இருக்க பழுதடைந்த நிப்பிள்களை மாற்ற வேண்டும். இறந்த கோழிகள் மற்றும் உடைந்த முட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தீவன சிதறல்களை தவிர்க்க வேண்டும். ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கோழிகளுக்கு மருந்து கலந்த தீவனம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story