வாழையில் இலை கருகல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி? -தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விளக்கம்

வாழையில் இலை கருகல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை வட்டாரத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் கதளி, நேந்திரம், செவ்வாழை ஆகிய ரகவாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தார் அறுவடைக்கு பின், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் கேரள மார்க்கெட் பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்ந நிலையில் வாழையில் இலைக்கருகல் நோயின் அறிகுறி மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறை குறித்து சுல்தான்பேட்டை தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:- இலைக்கருகல் நோய் பாதித்த வாழை இலைகளில் சிறிய இளமஞ்சள் நிறப்புள்ளிகள் தோன்றி பின் பழுப்பு நிறமாக மாறிவிடும் அப்படியே மரம் முழுவதும் பரவி காய்ந்துவிடும் இந்த நோயினை இயற்கை முறையில் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் சூடோமோனஸ் என்ற விகிதத்தில் கலந்து அதனுடன் ஒட்டுபசை சேர்த்து தெளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் வாழையில் ஏற்படும் இலைக்கருகல் நோயை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.