பரமத்தி வட்டாரத்தில் மரவள்ளியை தாக்கும் செம்பேனை கட்டுப்படுத்துவது எப்படி?


பரமத்தி வட்டாரத்தில் மரவள்ளியை தாக்கும் செம்பேனை கட்டுப்படுத்துவது எப்படி?
x
தினத்தந்தி 6 July 2023 6:45 PM GMT (Updated: 8 July 2023 11:56 AM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்தி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குர் தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பரமத்தி வட்டாரத்தில் தற்போது உள்ள பருவநிலை காரணமாக மரவள்ளி சாகுபடியில் செம்பேன் தாக்குதல் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட செடிகளில் இலைகளின் அடிப்பகுதியில் செம்பேன் காணப்படும். இலைகள் பச்சையம் இழந்து காய்ந்து விடும். பின்னர் இலைகள் உதிர்ந்து விடும். இதனால் மகசூல் இழப்பீடு ஏற்படும். செம்பேன் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க கீழ்கண்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்கலாம். செம்பேன் பூச்சி பாதிப்பு அதிக அளவில் இருக்கும் போது ஓமைட் 1 லிட்டருக்கு 2 மில்லி அல்லது ஓபரான் 1 லிட்டருக்கு 1.5 மில்லி அல்லது வெட்ட புல் சல்பர் 1 லிட்டருக்கு 2 கிராம் இதனுடன் அசாடிராக்டின் 1 லிட்டருக்கு 3 மில்லி மற்றும் ஏதேனும் ஒட்டும் திரவம் 1 லிட்டருக்கு 1 மில்லி கலந்து செடியின் இலை அடிப்பகுதியில் நன்கு நனையும் படி கைத் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பரமத்தி வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன் அடையலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story