வெள்ளத்தில் சிக்கினால் தப்புவது எப்படி?


வெள்ளத்தில் சிக்கினால் தப்புவது எப்படி?
x

வெள்ளத்தில் சிக்கினால் தப்புவது எப்படி? என்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் செய்து காட்டினார்கள்.

ஈரோடு

ஈரோடு:

வெள்ளத்தில் சிக்கினால் தப்புவது எப்படி? என்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் செய்து காட்டினார்கள்.

சென்னிமலை

தென்மேற்கு பருவமழை காலங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னிமலை தீயணைப்பு நிலையம் சார்பில் சென்னிமலை அருகே அய்யம்பாளையம் குளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னிமலை தீயணைப்பு நிலைய அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு பணியாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு பொருட்களை கொண்டு மழை, வெள்ளம் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தங்களை தாங்களே எப்படி காப்பாற்றிக் கொள்வது போன்ற நடைமுறை பயிற்சிகளை செய்து காட்டினார்கள். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

கொடுமுடி

இதேபோல் கொடுமுடி தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் சார்பில் கொடுமுடியில் உள்ள காவிரி ஆற்று படித்துறையில் மழை மற்றும் வெள்ள அபாய காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவரை மீட்பது குறித்த செயல் விளக்க பயிற்சி பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது. அப்போது மீட்பு பணிகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை கொண்டு தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கொடுமுடி வருவாய் மண்டல துணை தாசில்தார் பரமசிவம், தீயணைப்பு நிலைய அதிகாரி சரவணன், வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஊஞ்சலூர்

இதேபோல் ஊஞ்சலூர் அருகே உள்ள மன்னாதம்பாளையம் காவிரி ஆற்றில் தீயணைப்புதுறையினர் பேரிடர் காலத்தில் பாதுகாப்பாக இருப்பது எப்படி? என்று பொதுமக்கள் முன்னிலையில் செயல் விளக்கம் செய்து காட்டினார்கள். இதையொட்டி மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மன்னாதம்பாளையம் காவிரி ஆற்றில் தண்ணீரில் சிக்கிக்கொண்டால் மீட்பது எப்படி? என்று விளக்கினார்கள். பொதுமக்கள் பலர் இதில் கலந்துகொண்டார்கள்.


Related Tags :
Next Story