கூட்ட நெரிசலில் சிக்கும் பக்தர்களை முதலுதவி செய்து மீட்பது எப்படி?-தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம்


கூட்ட நெரிசலில் சிக்கும் பக்தர்களை முதலுதவி செய்து மீட்பது எப்படி?-தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம்
x

கூட்ட நெரிசலில் சிக்கும் பக்தர்களை முதலுதவி செய்து மீட்பது எப்படி?-தீயணைப்புத்துறையினர் செயல்விளக்க பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் தீயணைத்துறையினர் சார்பில் கோவில் பணியாளர்களுக்கு தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு பயிற்சி மற்றும் மருத்துவ முதலுதவி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று பழைய திருக்கல்யாண மண்டபத்தில் இந்த பயிற்சி நடந்தது. கோவில் துணை கமிஷனர் அருணாசலம் தலைமையில் நடந்த இந்த பயிற்சியில் உதவி கமிஷனர் யக்ஞநாராயணன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மீனாட்சி கோவில் தீயணைப்புத்துறை அதிகாரி சேகர் மற்றும் தீயணைப்புத்துறையினரால் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதில் தீயின் வகைகள், அதனை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும். அவசர ஆபத்து காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தீயை அணைக்கும் கருவிகள் மூலம் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது பக்தர்களுக்கு ஏற்படும் மூச்சுத்திணறல், மயக்கம் போன்றவற்றிக்கு எவ்வாறு முதலுதவி செய்து காப்பாற்றி அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் மதன்ராஜ் மற்றும் தீயணைப்புத்துறையினர் விளக்கம் அளித்தனர். இதில் மீனாட்சி அம்மன் கோவில் அனைத்து பணியாளர்கள், கூடலழகர் கோவில் மற்றும் சிம்மக்கல் ஆஞ்சநேயர் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story