மண்புழு உரம் தயாரிப்பது எப்படி?

மண்புழு உரம் தயாரிப்பது குறித்து வேளாண் அதிகாரி தெரிவித்து உள்ளார்.
எஸ்.புதூர்,
மண்புழு உரம் தயாரிப்பது குறித்து வேளாண் அதிகாரி தெரிவித்து உள்ளார்.
மண்புழு உரம்
இது தொடர்பாக எஸ்.புதூர் வேளாண்மை உதவி இயக்குனர் அம்சவேணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
பாதி மக்கிய நிலையில் உள்ள பல்வேறு இயற்கை கழிவுகளுடன், ஓரளவு சாணம் கலந்து அதில் மண் புழுக்களை விட்டு ஈரத்தினை பராமரிக்க வேண்டும். இதன் மூலமாக ஓரிரு மாதங்களில் அந்த கழிவுகள் அனைத்தும் மண் புழுக்களால் உண்ணப்பட்டு தனது வளர்ச்சிக்கு சுமார் 10 சதவீதம் பயன்படுத்திக்கொண்டு மீதம் 90 சதவீதத்தை உடனடியாக பயிர்களுக்கு பயன்படுத்தக்கூடிய உரமாக வெளியிடுகிறது. அதில் 2-4 சதவீதம் தழை சத்தும், 3-4 சதவீதம் மணி சத்தும், 1-2 சாம்பல் சத்தும் கிடைக்கின்றது.
மண்வளம் பெருக்குதல்
விவசாயிகள் உழைப்பின் மூலம் மண்புழு உரம் தயாரிப்பது அல்லது தயாரிக்கும் கம்பெனிகளில் இருந்து வாங்குவதைவிட தாங்கள் பயிரிடும் சூழலிலேயே மூடாக்கு அமைத்து மண்புழு உரங்களை உருவாக்கலாம். தென்னை, வாழை, மா, சப்போட்டா, எலுமிச்சை போன்ற பழத்தோட்டங்களில் மரச்செடிகள் பயிரிடும் போது அவற்றை சுற்றியும் சில காய்கறி பயிர் போன்றவற்றிற்கும் மூடாக்கு அமைத்து தொடர்ந்து உரத்தை பராமரித்தால் மண் புழுக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் இயற்கையாகவே பெருகும். மண் வளத்தினையும் உயர்த்த முடியும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.






