கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?


கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?
x

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி என்பது குறித்து கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொற்று அதிகரிப்பு

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, மராட்டியம், குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் அனைவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிப்பு அடையாமல் தங்களை பாதுகாத்து கொள்ள கீழ்கண்ட வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிதல், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், அவ்வப்போது கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, உடம்பு வலி, தொண்டை வலி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் ஆலோசனை பெற்று கொரோனா பரிசோதனை செய்து, தொற்று உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

தனிமை...

கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் குணமடையும் வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மேற்கூறிய நடவடிக்கைகளை பின்பற்றி கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து நலமுடன் வாழ வேண்டும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.


Next Story