தீ விபத்துகளில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?
தீ விபத்துகளில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? என தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
புதுக்கோட்டை
அன்னவாசல் அருகே உள்ள மேலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தீ விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி தலைமை தாங்கினார். இதில் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் சின்னகண்ணு உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்களுக்கு தீ விபத்துகளில் இருந்து தங்களை தற்காத்து கொள்வது எப்படி? என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். பின்னர் விபத்து ஏற்பட்டால் அடிபட்டவர்களை எப்படி தூக்கி செல்வது, எரிந்து கொண்டிருக்கும் தீயை எவ்வாறு அணைப்பது, நீரில் மூழ்கியவரை எவ்வாறு காப்பாற்றுவது? என்பது உள்ளிட்ட செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
Related Tags :
Next Story