ஹூப்ளி-தஞ்சை சிறப்பு ரெயில் நாளை ரத்து


ஹூப்ளி-தஞ்சை சிறப்பு ரெயில் நாளை ரத்து
x

ஹூப்ளி-தஞ்சை சிறப்பு ரெயில் நாளை ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி

ஜோலார்பேட்டை மற்றும் பெங்களூரு ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பின்வரும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி, ஹூப்ளியில் இருந்து இரவு 8.25 மணிக்கு திருச்சி வழியாக தஞ்சைக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்:07325) நாளை (திங்கட்கிழமை) முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. இதுபோல் மறுமார்க்கத்தில் தஞ்சையில் இருந்து இரவு 7.40 மணிக்கு திருச்சி வழியாக ஹூப்ளி புறப்படும் ரெயில் (வ.எண்:07326) நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இயங்காது.

மேலும் மதுரையில் இருந்து வருகிற 14-ந்தேதி காலை 11.55 மணிக்கு பைகானருக்கு புறப்படும் மதுரை-பைகானர் வாராந்திர அதிவிரைவு ரெயில் (வ.எண்:22631) பெத்தபள்ளி, நிஜாமாபாத், பூர்ணா, அகோலா, டனேரா, நாக்பூர் வழியாக திருப்பிவிடப்படுகிறது. இதுபோல் மன்னார்குடியில் இருந்து வருகிற 25-ந்தேதி பகல் 1.15 மணிக்கு புறப்படும் மன்னார்குடி - பகத் கி கோத்தி வாராந்திர அதிவிரைவு ரெயில் பெத்தபள்ளி, நிஜாமாபாத், பூர்ணா, அகோலா வழியாக திருப்பிவிடப்படுகிறது.


Next Story