சமூக நல்லிணக்க மனித சங்கிலி


சமூக நல்லிணக்க மனித சங்கிலி
x
தினத்தந்தி 11 Oct 2022 6:45 PM GMT (Updated: 11 Oct 2022 6:46 PM GMT)

ஊட்டி,கூடலூரில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடந்தது.

நீலகிரி

கூடலூர்,

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக கடந்த 2-ந் தேதி காந்தி ஜெயந்தி நாளில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் மற்றும் தோழமை கட்சிகள் அறிவித்தது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி போலீஸ் அனுமதி மறுத்தது. தொடர்ந்து 12-ந் தேதி மனித சங்கிலி நடத்தி கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அதன்படி மாநிலம் முழுவதும் நேற்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். வாசு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி), முகமது கனி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), அம்சா (காங்கிரஸ்), அனீபா (முஸ்லிம் லீக்), சாதிக் பாபு (மனிதநேய மக்கள் கட்சி), அன்சாரி (ஜனநாயக மக்கள் கட்சி) உள்பட தோழமைக் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இதேபோல் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஊட்டியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடந்தது. காபிஹவுஸ் ரவுண்டானா முதல் கேசினோ வரை மதச்சார்பற்ற ஜனநாயக கட்சியினர் அணிவகுத்து நின்றனர். இதில் இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.


Next Story