சமூக நல்லிணக்க மனித சங்கிலி


சமூக நல்லிணக்க மனித சங்கிலி
x

ஆம்பூரில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஆம்பூர் பஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது. தொகுதி செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், ம.தி.மு.க. கம்யூனிஸ்டு கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கைகோர்த்து நின்றனர்.

அப்போது மக்கள் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை ஆகியவற்றை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் பாசித், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொருளாளர் கொத்தூர் மகேஷ், நகரத் தலைவர் சரவணன், பேரணாம்பட்டு ஒன்றிய தலைவர் சங்கர், ம.தி.மு.க. நகர செயலாளர் ரவிக்குமார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நசீர் அஹமத், எஸ்.டி.பி.ஐ மாவட்டத்தலைவர் அசத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story