நெல்லையில் மனித சங்கிலி போராட்டம்


நெல்லையில் மனித சங்கிலி போராட்டம்
x

நெல்லையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மருதம் நலச்சங்கம் சார்பில் நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சமூக நீதிப்போராளி தியாகி இம்மானுவேல் சேகரனார் 100-வது பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

தேவேந்திரர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் நாஞ்சை ரவி தேவேந்திரன் தலைமை தாங்கினார். மருதம் நலச்சங்க கவுரவ தலைவர் அமிர்தா சுப்பிரமணியன், செயலாளர் புதிய ஜெயசிங், பொருளாளர் மாரியப்பன், உமா சங்கர், செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மனித சங்கிலியை தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், அகரத் தமிழர் கட்சி தலைவர் குயிலி நாச்சியார், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முத்துவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் சாலையின் இருபுறமும் கைகளை கோர்த்து மனித சங்கிலியாக நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.


Related Tags :
Next Story