மனுநீதி நாள் முகாம்
மனுநீதி நாள் முகாம் நடந்தது.
கரூர்
தோகைமலை அருகே பில்லூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் லெட்சுமி பழனி தலைமை தாங்கினார். குளித்தலை ஆர்.டி.ஒ. புஸ்பாதேவி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கலந்து கொண்டு, 461 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 39 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பள்ளி செல்லா 4 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி அவர்களை பள்ளியில் புதிய சேர்க்கையில் சேர்த்து விட்டார். தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக கலெக்டர் பிரபுசங்கர் கரூரில் இருந்து பில்லூருக்கு அரசு பஸ்சில் அதிகாரிகளுடன் வந்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஒன்றிய ஆணையர்கள் விஜயகுமார், சரவணன், அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story