அழிச்சிக்குடியில் மனுநீதி நாள் முகாம்585 பேருக்கு நலத்திட்ட உதவிகள்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்


அழிச்சிக்குடியில் மனுநீதி நாள் முகாம்585 பேருக்கு நலத்திட்ட உதவிகள்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்
x

அழிச்சிக்குடியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 585 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கடலூர்

புவனகிரி,

மனுநீதி நாள் முகாம்

மேல் புவனகிரி ஒன்றியம் அழிச்சிக்குடி ஊராட்சியில் தமிழக அரசின் மனுநீதி நாள் சிறப்பு முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிதம்பரம் உதவி கலெக்டர் சுவேதா சுமன் அனைவரையும் வரவேற்றார். புவனகிரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஏ. எஸ்.மதியழகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அமுதராணி தனசேகரன், மாவட்ட கவுன்சிலர் வெங்கடேசன், அழிச்சிகுடி ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தாவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வளர்ச்சித்திட்ட பணிகள்

சிறப்பு அழைப்பாளராக தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பயனாளிகள் 585 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். குறிப்பாக அழிச்சிகுடி ஊராட்சியில் ரூ.7 கோடியே 15 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

முகாமில் கூடுதல் ஆட்சியர் பவன் குமார் ஜி கிரியப்பனவர், புவனகிரி நகர செயலாளர் கந்தன், நகர இளைஞரணி அமைப்பாளர் பி.ஜி.கே.முத்து, ஒன்றிய துணை செயலாளர்கள் வெற்றிவேல், குமரவேல், ஒன்றிய அவை தலைவர் மாறன், தி.மு.க. நிர்வாகி சாரங்கபாணி, ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் அப்பா ரவிக்குமார் உள்பட அனைத்துத் துறைகளை சேர்ந்த அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தாசில்தார் ரம்யா நன்றி கூறினார்.


Next Story