மனுநீதி நாள் முகாம்


மனுநீதி நாள் முகாம்
x

மனுநீதி நாள் முகாம் நடந்தது.

கரூர்

தோகைமலை அருேக உள்ள தேசியமங்கலம் கிராமத்தில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் தலைமை தாங்கி, 357 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். முன்னதாக, வேளாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை ஆகியவை மூலம் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார். இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி, மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன், பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story