மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆய்வு
கோவை மத்திய சிறையில் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆய்வு
கோயம்புத்தூர்
கோவை
கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் தனிச்சிறையில் தமிழக மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் நேற்று காலை திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பெண் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு பார்த்து உணவின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் மருத்துவ வசதி, அடிப்படை வசதி, சட்ட உதவிகள், உறவினர்களிடம் பேசுவதற்கு அனுமதிக்கப்படும் முறைகள், சுகாதாரம் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும் அவர் பெண் கைதிகளிடம் குறைகளையும் கேட்டு அறிந்தார். சிறையில் வைக்கப்பட்டிருந்த பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். அப்போது கோவை சிறை டி.ஐ.ஜி. சண்முக சுந்தரம், சிறை சூப்பிரண்டு ஊர்மிளா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story