மனித கழிவுகளை தானியங்கி எந்திரம் மூலம் அகற்ற வேண்டும்


மனித கழிவுகளை தானியங்கி எந்திரம் மூலம் அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி நகராட்சியில் மனித கழிவுகளை தானியங்கி எந்திரம் மூலம் அகற்ற வேண்டும் என்று நகரசபை தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் நகராட்சி சார்பில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் அறிவுடைநம்பி வரவேற்றார். கூட்டத்தில் நகரசபை தலைவர் துர்கா ராஜசேகரன் கலந்து கொண்டு பேசுகையில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றக் கூடாது. இது சட்டப்படி குற்றமாகும். மனித கழிவுகளை மனிதனே அள்ளினால் அள்ள வலியுறுத்தியவருக்கும், அள்ளியவருக்கும் பிணையில் வர முடியாத 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். சீர்காழி நகர் பகுதியில் மனித கழிவுகளை அகற்ற வேண்டுமானால் தானியங்கி எந்திரம் மூலம் அகற்ற வேண்டும். சீர்காழி நகராட்சியில் பதிவு செய்த ஒப்பந்தக்காரர்களை கொண்டு தான் எந்திரம் மூலம் மனித கழிவுகளை அகற்ற வேண்டும் என்றார். இதில் உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், டெங்கு ஒழிப்பு பணி மேற்பார்வையாளர் அலெக்ஸ், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story