தேவாலா பகுதியில் வனத்துறை சார்பில் மனித- வனவிலங்கு மோதல் தடுப்பு விழிப்புணர்வு
தேவாலா பகுதியில் வனத்துறை சார்பில் மனித- வனவிலங்கு மோதல் தடுப்பு விழிப்புணர்வு
கூடலூர்
கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்கார் உத்தரவின் பேரில் உதவி வன பாதுகாவலர் கருப்பையா மேற்பார்வையில் பந்தலூர் சரகம் பொன்னூர், கைதக்கொல்லி, தேவாலா அட்டி, வாழவயல், கண்ணா கடை, டேன்டீ 4பி, அத்திமாநகர், கூவமூலா, மாங்கோ ரேஞ்ச் ஆகிய பகுதியில் மனித- வன விலங்கு மோதல் தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வனசரகர் சஞ்சீவி தலைமை தாங்கினார். வனவர் செல்லதுரை, வனக்காப்பாளர் விஸ்வநாதன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். யானைகள் - மனித மோதலை பற்றியும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மற்றும் பொம்மை கலை குழுவினருடன் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வேட்டை தடுப்பு காவலர்கள், யானை கண்காணிப்பு குழுவினர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், வட மாநில தொழிலாளர்கள், ஜீப் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.