கூடலூர் வனத்துறை சார்பில் மனித -வனவிலங்கு மோதல் தடுப்பு விழிப்புணர்வு போட்டி


கூடலூர் வனத்துறை சார்பில் மனித -வனவிலங்கு மோதல் தடுப்பு விழிப்புணர்வு போட்டி
x
தினத்தந்தி 13 July 2023 12:15 AM IST (Updated: 13 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் வனத்துறை சார்பில் மனித -வனவிலங்கு மோதல் தடுப்பு விழிப்புணர்வு போட்டி

நீலகிரி


கூடலூர்


கூடலூர் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் கொம்மு ஒம்காரம் உத்தரவின்பேரில் உதவி வன பாதுகாவலர் கருப்பையா மேற்பார்வையில் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவ நிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் கூடலூர் வன சரகத்திற்கு உட்பட்ட புளியம்பாறை அரசு உயர் நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு நடவடிக்கைகள், வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்து பேச்சு போட்டி, ஓவிய போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி கூடலூர் வனச்சரக அலுவலர் ராதாகிருஷ்ணன், நாடுகாணி வன சரகர் வீரமணி, வனவர் சுரேஷ்குமார், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் பெற்றோர்களின் முன்னிலையில் போட்டிகள் நடத்தப்பட்டன.


1 More update

Next Story