மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மேலப்பாளையத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

மனிதநேய மக்கள் கட்சியினர் மேலப்பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட தலைவர் ரசூல்மைதீன் தலைமை தாங்கினார். இஸ்லாமிய பிரசார பேரவை மாநில செயலாளர் அப்துல் காதர் மன்பஈ, துணைச்செயலாளர் காசிம்பிர்தவுசி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.

மணிப்பூரில் இளம்பெண்கள் மீது நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு பிரிட்டோ, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜாவித், பொருளாளர் மைதீன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் கோல்டன் காஜா, இளைஞர் அணி மாநில பொருளாளர் ரியாசூர் ரகுமான், வக்கீல் அணி மாநில பொருளாளர் முகமதுஉசேன், மருத்துவ சேவை அணி துணைச் செயலாளர் ரசூல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story