மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்
கலவையில் மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முஹம்மது அலி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கிஷர் அலி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் இம்ரான் சாஹிப் வரவேற்றார்.
கூட்டத்தில் 12 மணி நேரம் வேலை செய்யும் திட்டத்தை ரத்து செய்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது. நீண்ட நாட்களாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். வருகிற 21-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ள சமூக நீதி பாதுகாப்பு மாநாட்டிற்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து அதிகளவு மக்கள் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. முடிவில் நகர தலைவர் மஹாபாஷா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story