உண்டியல்கள் மூலம் ரூ.19 லட்சம் வருமானம்


உண்டியல்கள் மூலம் ரூ.19 லட்சம் வருமானம்
x

உண்டியல்கள் மூலம் ரூ.19 லட்சம் வருமானம் கிடைத்தது.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள 35 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டன. துணைகமிஷனர் சுரேஷ் மேற்பார்வையில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உதவி ஆணையர் கருணாகரன், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் ஆய்வர் செல்வம், கோவில் பணியாளர்கள், சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஸ்கந்த குரு வித்யாலயா வேதசிவாகம பாடசாலை மாணவர்கள் மற்றும் அய்யப்ப சேவா சங்கத்தினர் கலந்துகொண்டு உண்டியலில் கிடைத்த பணம், காசு, தங்கம், வெள்ளி என ரகம் பிரித்து பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில் ரொக்கமாக ரூ.19 லட்சத்து 11 ஆயிரத்து 333 ரூபாய்,665 கிராம் தங்கம், 748 கிராம் வெள்ளி இருந்தது. இந்த பணியில் உள்துறை கண்காணிப்பாளர் சுமதி, அலுவலக கண்காணிப்பாளர் கோகுலக் கண்ணன், துணை கமிஷனரின் நேர்முக உதவியாளர் மணிமாறன், பேஷ்கார் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story