நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு.


நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு.
x

தாராபுரத்தில் அடிப் பெருக்கை முன்னிட்டுநூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு.

திருப்பூர்

தாராபுரம்

தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆடி பெருக்கை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக வந்து அமராவதி ஆற்றில் விடும் விழா கோலாகலமாக கொண்டாடினர். விவசாயத்திற்கும் குடிநீருக்கும் உதவி செய்யும் தண்ணீருக்கு நன்றி சொல்லும் விதமாக படையலிட்டு அமராவதி அன்னையை, மக்கள் வழிபட்டனர். புதுமண பெண்கள் புனித நீராடி புது தாலி மாற்றிக்கொண்டனர்.

தாராபுரத்தில் அமராவதி ஆற்றில், ஆடிப்பெருக்குயொட்டி, ஏராளமான பொதுமக்கள் குவிந்து அமராவதி ஆற்றில் வழிபட்டனர்.பின்னர்

ஆடிப்பெருக்கை நாளில் அதிகாலை முதலே, ஆற்றங்கரைகளில், பொதுமக்கள் குவிந்தனர். அப்போது முன்னோர்களுக்கு திதி கொடுக்க மக்கள் நீண்ட தூரம் நின்று

அமராவதி ஆற்றின் கரையோரத்தில் வாழை இலை விரித்து, மிட்டாய், முறுக்கு போன்ற பலகாரங்களும், பழங்களும், தேங்காய், பூ படைத்து, ஏழு கூலாங்கற்களை சப்த கன்னிகளாக பாவித்து, கற்பூரம் ஏற்றி பித்ருக்களையும், தெய்வங்களையும் வழிபட்டனர். அதன்பின், படைகளை ஆற்றில் விட்டு வழிபட்டனர். திருமணமாகாதவர்கள் திருமணம் நடக்க வேண்டியும், திருமணமானவர்கள் குழந்தை வேண்டியும் சப்த கன்னிகளை வழிபட்டானர். திருமணமான சுமங்கலி பெண்கள், புதிய தாலி சரடு மாற்றி கொண்டனர். சமீபத்தில் திருமணமான புதிய தம்பதிகள், தங்களின் திருமண மாலைகளில் ஆற்றில் விட்டு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். தெய்வங்களையும், பித்ருகளையும் வழிபட்டு பொதுமக்களுக்கு சிலர் அன்னதானம் செய்து

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து, வழிபட்டு சென்றனர். அதேபோன்று, அலங்கியம், சீதக்காடு, தில்லா புரி அம்மன் கோவில், புதிய ஆற்று பாலம் உள்ளிட்ட நீர் நிலைகளிலும், பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

சிலர் மறைந்த முதியோர்களுக்கு படையலிட்டு வணங்கினர்.


Next Story