கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற கணவன்-மனைவி போலீசார் மீட்டனர்


கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற கணவன்-மனைவி போலீசார் மீட்டனர்
x
தினத்தந்தி 14 Nov 2022 11:12 AM IST (Updated: 14 Nov 2022 11:14 AM IST)
t-max-icont-min-icon

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற கணவன்-மனைவியை போலீசார் மீட்டனர்.

திருவள்ளூர்

திருவொற்றியூர்,

திருவெற்றியூர் ராஜா சண்முகம் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 50). கட்டிட ஒப்பந்ததாரர். இவருடைய மனைவி தேவிகா (47). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

சதீஷ்குமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் கணவன்- மனைவி இருவரும் நேற்று காலை காசிமேடு, அண்ணாநகர் பகுதியில் கடலை நோக்கி நடந்து சென்றனர். திடீரென 2 பேரும் கடலில் குதிக்க முயன்றனர். இதை பார்த்து அங்கிருந் தவர்கள் கூச்சலிட்டனர்.

ஆனால் தேவிகா மட்டும் கடலில் குதித்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் கடலில் குதித்த தேவிகாவை மீனவர்கள் உதவியுடன் மீட்டனர்.

தேவிகா-சதீஷ்குமார் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடலில் குதித்து தற்கொலை செய்ய வந்ததாக தெரிவித்தனர். அவர்களுக்கு மீன்பிடித்துறைமுக ஆய்வாளர் பிரான்வின் டேனி அறிவுரை கூறி எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தார்.


Next Story