கர்ப்பிணியை கொடுமைப்படுத்திய கணவர் கைது
விருத்தாசலம் அருகே கர்ப்பிணியை கொடுமைப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.
கடலூர்
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கோ.பவழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிராஜ் (வயது 30). இவரும் அதே பகுதியை சேர்ந்த சர்மிளா பானு(24) என்பவரும், காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மீண்டும் சர்மிளா பானு 8 மாத கர்ப்பிணியானார். இந்தநிலையில் மணிராஜ் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு அவருக்கு, சாப்பாடு, தண்ணீர் எதுவும் கொடுக்காமலும், சிகரெட்டால் உடலில் பல இடங்களில் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதில் காயமடைந்த சர்மிளா பானு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாாின்பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story