பெண்ணை தாக்கிய கணவர் கைது
பெண்ணை தாக்கிய கணவர் கைது
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகரை சேர்ந்தவர் தேவநாதன்(வயது 38). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தில் சிலிண்டர் வினியோகிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கோமதி(37). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சம்பவத்தன்று தேவநாதன், மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியை சந்தேகப்பட்டு திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோமதி, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவநாதனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story