பெண்ணை தாக்கிய கணவர் கைது


பெண்ணை தாக்கிய கணவர் கைது
x
தினத்தந்தி 19 Feb 2023 6:45 PM GMT (Updated: 19 Feb 2023 6:45 PM GMT)

நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 37). இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள னர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் கனகராஜ், தனலட்சுமியை கத்தியால் குத்தினார். இந்த வழக்கில் அவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த அவர், தனது மனைவி மற்றும் மகன்களுடன் மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்தார்.

இதற்கிடையில் கடந்த வாரம் தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகப் பட்டு கனகராஜ் தாக்கியதாக தெரிகிறது. இதனால் அவர், ஊமப் பாளையம் புதுகாலனியில் வசிக்கும் தனது அண்ணன் குணசேகரன் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவரை அழைக்க நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு கனகராஜ் சென்றார். ஆனால் அவர் வர மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கனகராஜ், தனலட்சுமியை தாக்கினார். இதை தடுக்க முயன்ற தனலட்சுமியின் தாயார் பாஞ்சாலியை கத்தியால் வெட்டிய தாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார், வழக்கு பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர்.


Next Story