பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் கைது


பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் கைது
x
தினத்தந்தி 22 July 2023 1:45 AM IST (Updated: 22 July 2023 5:13 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் கைது

தஞ்சாவூர்

திருவோணத்தை அடுத்துள்ள தளிகைவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி (வயது50). இவரது மனைவி நான்சியா (33). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த தங்கமணி, கடந்த 15 தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். கணவன்- மனைவி இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரமடைந்த தங்கமணி இரும்பு கம்பியால் நான்சியாவை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த நான்சியா தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நான்சியா கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story