மனைவியை தாம்பூல தட்டால் வெட்டிய கணவர் கைது


மனைவியை தாம்பூல தட்டால் வெட்டிய கணவர் கைது
x

மனைவியை தாம்பூல தட்டால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

தண்ணீர் கொடுக்க...

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சூரியமணல் கிராமத்தில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா. கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி ஜெயப்பிரியா(வயது 26) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். மேலும் ராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாகவும், இதனால் அவர் குடிபோதையில் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜா, ஜெயப்பிரியாவிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அவர் குடிப்பதற்காக தண்ணீர் கேட்டுள்ளார்.

ஆனால் தண்ணீர் கொடுக்க தாமதப்படுத்தியதாக கூறி குடத்தை மூடியிருந்த தாம்பூல தட்டால் ெஜயப்பிரியாவின் கழுத்தில் ராஜா வெட்டியதாக கூறப்படுகிறது.

கைது

இதில் பலத்த காயமடைந்த ஜெயப்பிரியா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story