மனைவி குறித்து 'ஸ்டேட்டஸ்' பதிவிட்ட கணவர் கைது
மனைவி குறித்து 'ஸ்டேட்டஸ்' பதிவிட்ட கணவர் கைது செய்யப்பட்டார்
சேலம்
இரும்பாலை:-
சேலம் இரும்பாலை கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 54). இவர், கிரானைட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நளினி தேவி (50). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இதற்கிடையே தன்னுடைய மனைவி குறித்து ராமமூர்த்தி, வாட்ஸ்அப்பில் தவறான கருத்தை 'ஸ்டேட்டஸ்' வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நளினி தேவி சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்குப்பதிவு செய்து ராமமூர்த்தியை கைது செய்தார்.
Related Tags :
Next Story