தற்கொலைக்கு தூண்டியதாக கணவன், மாமியார் கைது
தற்கொலைக்கு தூண்டியதாக கணவன், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் அருேக உள்ள குல்லூர்சந்தையை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 21). இவரும் எட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (24) என்பவரும் ஒரு தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் விஜயலட்சுமியின் தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் பாலசுப்பிரமணியன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடந்த 2021-ம் ஆண்டு பாலசுப்பிரமணியன் விடுதலையான பின்பு பாலசுப்பிரமணியன் விஜயலட்சுமியை பதிவு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கணவன் வீட்டில் இருந்த விஜயலட்சுமியை மாமியார் மாரியம்மாள் (45) என்பவர் பிரச்சினை செய்த நிலையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். ஆர்.டி.ஓ. விசாரணை அறிக்கை அடிப்படையில் விஜயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக சூலக்கரை போலீசார் விஜயலட்சுமியின் கணவர் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது தாயார் மாரியம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர்.