மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரை கத்தியால் குத்தி கொன்ற கணவன் - தேனியில் பயங்கரம்


மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரை கத்தியால் குத்தி கொன்ற கணவன் - தேனியில் பயங்கரம்
x

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவை சேர்ந்தவர் தீபாவளி. கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 7 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில், இவரது மனைவியான சங்கீதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டது.

ஈஸ்வரனுக்கும் திருமணமாகி மனைவி, குழந்தகள் உள்ள நிலையில், இந்த உறவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை அறிந்த சங்கீதாவின் கணவர், இருவரையும் கண்டித்துள்ளார்.

ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கீதாவும், ஈஸ்வரனும் ஜோடியாக ஊரைச்சுற்றிவிட்டு, பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இது தொடர்பாக ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வரும்படி மூவரையும் போலீசார் அழைத்துள்ளனர்.

அதன்படி, இன்று ஆண்டிப்பட்டுக்கு சங்கீதாவும், ஈஸ்வரனும் வந்தனர். அங்கு ஏற்கெனவே பேருந்து நிலையில் இருந்த சங்கீதாவின் கணவர், ஜோடியாக இருவரும் பேருந்தில் இருந்து இறங்குவதை கண்டு ஆத்திரமடைந்தார்.

பின்னர், தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து இருவரையும் சரமாரியாக குத்திவிட்டு போலீசில் சரணடைந்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் மீட்ட போலீசார், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஈஸ்வரன் உயிரிழந்தார். காயமடைந்த சங்கீதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story