தீயில் எரிந்து கூரை வீடு நாசம்


தீயில் எரிந்து கூரை வீடு நாசம்
x

சீர்காழி அருகே தீயில் எரிந்து கூரை வீடு நாசமடைந்தது.

மயிலாடுதுறை

சீர்காழி;

சீர்காழி அருகே எடமணல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆமபள்ளம் கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முகேஷ்குமார்(வயது38). கூலித் தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு முகேஷ்குமார் குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது பலத்த காற்று வீசியதால் வீடு முழுவதும் எரிந்து நாசமானது. இதில் வீட்டில் இருந்த பீரோ, நகை, பணம், உடைகள், உணவுப் பொருள்கள், கட்டில், மெத்தை, சைக்கிள், டிவி, ப்ரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்த தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து கூரை வீட்டில் எப்படி தீப்பிடித்தது? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story