நானும் டெல்டாக்காரன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


நானும் டெல்டாக்காரன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 11 Jun 2023 1:11 PM IST (Updated: 11 Jun 2023 1:23 PM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி திரைத்துறையில் முழுநேர வசன கர்த்தாவானது சேலத்தில் தான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார். இன்று காலை சேலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து ரூ.96 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பழைய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். புதிய ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சேலத்தில் நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.1,367 கோடி மதிப்பிலான 390 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்., ரூ.235.81 கோடி மதிப்பிலான 331 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சேலத்தில் கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்தது மன நிறைவை தருகிறது. கருணாநிதி நூற்றாண்டு விழாவின் முதல் சிலையை சேலத்தில் நிறுவியது பொருத்தமான ஒன்று. கருணாநிதி சிலையை திறந்து வைத்த மனநிறைவுடன் நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். கருணாநிதி திரைத்துறையில் முழுநேர வசன கர்த்தாவானது சேலத்தில் தான். சேலத்துக்கும், கருணாநிதிக்கும் அன்பான நட்பு, குடும்ப நட்பு உள்ளது.

சேலத்தில் ரயில்வே கோட்டம், பெரியார் பல்கலைக்கழகம் திமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. எண்ணில் அடங்காத திட்டங்களை சேலம் மக்களுக்காக திமுக அரசு செய்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 17 ஆயிரம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து நாளை தண்ணீர் திறந்து வைக்க உள்ளோம். நானும் டெல்டாக்காரன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தான் திராவிடமாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்திற்கு இன்னும் அதிக திட்டங்கள் வர உள்ளன. சேலத்தில் புதிய கொலுசு உற்பத்தி மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சேலத்தில் ரூ.880 கோடி செலவில் ஜவுளி பூங்காவுக்கான கட்டமைப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. சேலம் அம்மாபேட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரெயில்வே மேம்பாலம் அமைக்க ஆய்வு செய்யப்படுகிறது.

உதய் திட்டத்தில் கையெழுத்திட்ட காரணத்தால் தான் மின்கட்டணத்தை திருத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. 5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 2 ஆண்டுகளில் செய்துள்ளோம். நம்பர் 1 முதலமைச்சர் என்று பெயர் வாங்குவதை விட நம்பர் 1 தமிழ்நாடு எனப் பெயர் வாங்க வேண்டும். தமிழ்நாட்டை பாழ்படுத்தும் ஒரு கூட்டம், முதலீட்டாளர் மாநாட்டை கொச்சைப்படுத்துகிறது.


10 ஆண்டு கால அதிமுக ஆட்சியால் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம். எனது வெளிநாட்டு பயணத்தால் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வர உள்ளன. தமிழ்நாட்டை பாழ்படுத்தும் கூட்டம் எனது வெளிநாட்டு பயணத்தை விமர்சித்து வருகிறது. மக்கள் திட்டங்களுக்கே நேரம் சரியாக இருப்பதால் யாருக்கும் பதிலளிக்க விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story