புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி அழைக்காதது ஏன்? சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்து சபாநாயகர் அப்பாவு பேசினார்.
சென்னை,
2023 ஆம் ஆண்டிற்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது விழங்கும் விழா சென்னையில், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜாவுக்கு பெரியார் ஒளி விருதும், சபாநாயகர் அப்பாவுக்கு காமராசர் கதிர் விருதும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அம்பேத்கர் சுடர் விருது, அயோத்திதாசன் விருது மற்றும் செம்மொழி ஞாயிறு விருது என பல விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், விருதுடன் 50 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது.
விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-
எல்லா சமூகத்திலும் நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்பவர் திருமாவளவன். இந்தியாவில் ஆயிரக்கணக்கான திருமாவளவன் தோன்ற வேண்டும். ஜனநாயகத்தில் உயர்ந்த மரியாதை ஜனாதிபதிக்கே. ஜனாதிபதியையே அழைக்காமல் நாடாளுமன்றம் திறக்கிறார்கள். "ஜனாதிபதி வந்தால் கங்கை நீரால் நாடாளுமன்றத்தை கழுவ வேண்டிருக்கும். அந்த மனநிலையில் தான் ஆர்.எஸ்.எஸ் தரப்பினர் இருக்கிறார்கள். இதை நினைத்ததால் தான் ஜனாதிபதியை அழைக்கவில்லை. மேலும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்து பேசினர்.