இரட்டை இலை சின்னம் பச்சை குத்திருக்கேன்..என் கையை அறுத்து எடுத்துடுவாங்களா..? ஓபிஎஸ் ஆதரவாளர் ஆவேச பேட்டி
"யார் என்ன புகார் கொடுத்தாலும் கவலை இல்லை" ."இரட்டை இலை சின்னம் இருப்பதால் என் கையை அறுத்து எடுப்பீர்களா?" என கூறினார்.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதற்கிடையே, திருச்சியில் முன்னாள் முதல் அமைச்சர் ஒ பன்னீர் செல்வம் நாளை மறுநாள் மாநாடு நடத்துகிறார். இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவு நிர்வாகிகள் முழு வீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இந்த மாநாட்டில் அதிமுக கொடியை ஓபிஎஸ் அணி பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கூறியதாவது ,
வரும் 24ஆம் தேதி திட்டமிட்டப்படி திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடைபெறும்.அதிமுகவில் எங்களுக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கும் கிடையாது.
"யார் என்ன புகார் கொடுத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை" "நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ எங்களுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. "கடந்த 40 ஆண்டுகளாக என் கையில் இரட்டை இலையை பச்சை குத்தி இருக்கிறேன்" "இரட்டை இலை சின்னம் இருப்பதால் என் கையை அறுத்து எடுப்பீர்களா?" என கூறினார்.
"இரட்டை இலை சின்னம் பச்சை குத்திருக்கேன்..என் கையை அறுத்து எடுத்துடுவாங்களா..?" ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் ஆவேச பேட்டி#ops | #opanneerselvam | #kpkrishnan | #aiadmk | #Pressmeethttps://t.co/JjbGmoOTun
— Thanthi TV (@ThanthiTV) April 22, 2023