ஜெயலலிதா மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன் - அண்ணாமலை
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது நான் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன். நான் பேசியது தவறாக திரித்து கூறப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது நான் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன். ஒரு பெண்ணாக அவர் திமுகவை எதிர்கொண்டு வளர்ந்து வந்த விதம் குறித்து பல முறை நான் பேசி உள்ளேன். அவருடைய பெயரை எங்குமே நான் குறிப்பிடவில்லை.
நான் பேசியது தவறாக திரித்து கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழலில் மூழ்கி உள்ளது. ஒரு குறிப்பிட்ட ஆட்சியை கடந்து ஊழல் பிரச்சினையாக உள்ளது என்று தான் பேசினேன். ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
Related Tags :
Next Story